பெரம்பலூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்.

schedule
2018-12-22 | 07:07h
update
2018-12-22 | 08:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Additional District Munsif Court in Perambalur opened the Chennai High Court Judge.

பெரம்பலூர்.டிச.22-

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நடைடிபெற்றது. அதனை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான பி.புகழேந்தி திறந்து வைத்தார்.

Advertisement

நீதிமன்ற திறப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி பாலராஜமாணிக்கம் மகிளா நீதிபதி என்.விஜயகாந்த், தலைமை நீதித்துறை நடுவர் ஏ.முரளீதரன், சார்பு நீதிபதி ஸ்ரீரிஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆ.வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக்பிரசாத், நீதித்துறை நடுவர் ஆ.மோகனப்பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், பார் அசோசியசன் சங்கத் தலைவர் இ.வள்ளுவன் நம்பி, செயலாளர் எம்.சுந்தரராஜன், அட்வகேட்ஸ் அசோசியசன் சங்கத் தலைவர் யு.முகமது இலியாஸ், செயலாளர் எஸ்.துரை, அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், வருவாய் துறை மற்றும் அரசு துறைகளைச் சார்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 11:02:05
Privacy-Data & cookie usage: