ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜை : பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில், தொழிலபதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு!

schedule
2022-07-23 | 12:14h
update
2022-07-23 | 12:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Adi 1st Friday Special Pooja: More than a thousand worshipers, including industrialist Dato Prakadeeshkumar, at Poolambadi Draupadi Amman Temple! 

 

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூர் மேல மந்தைவெளியில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடந்தது.

பன்னாட்டு மலேசியா தொழிலதிபரும், பூலாம்பாடியை பூர்வீகமாக கொண்டவருமான டத்தோ பிரகதீஷ் குமார் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Advertisement

அம்மன் சிலைகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேக அலங்காரம் செய்து மஹா தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில், டத்தோ பிரகதீஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் ஆடி முதல் வெள்ளி என்பதால், சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரவுபதி அம்மனை வழிபட்டனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறக்கட்டளை மற்றும் டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சார்பில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 09:47:08
Privacy-Data & cookie usage: