Admission Application Distribution in Veppanthattai Government College near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2018-19 ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்கியது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தொடங்கி வைத்தார்.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேகர் முன்னிலை வகித்தார். இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம் மற்றும் கணித அறிவியில், பி.காம். வணிகவியல், பி.பி.ஏ. வணிகநிர்வாகவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிகிறது.

எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பம் இலவசமாகவும், பொதுப் பிரிவு மாணவ, மாணவியர்களுக்கு ரூ.50 விண்ணப்ப கட்டணம் பெற்றுக் கொண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறை தலைவர்கள் ராமராஜ், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!