Admission for Primary Education Chartered Teacher Training, Perambalur Collector Information!

Model photo

பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் ஜூன் 5-ந் தேதி முதல் 15-ந் தேதிவரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பாடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், பி.சி/ பி.சி.எம்./எம்.பி.சி/ எஸ்.சி/ எஸ்.சி.ஏ / எஸ்.டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 31.07.2023 அன்றைய படி எஸ்.சி/ எஸ்.சி.ஏ/ எஸ்.டி பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதிற்கு மிகாமலும், ஆதரவற்றோர் / கணவனால் கைவிடப்பட்டோர் / கைம்பெண் ஆகியோர் 40 வயதிற்கு மிகாமலும், கலப்பின தம்பதியினர் பொது பிரிவு ( பி.சி/ பி.சி.எம்./எம்.பி.சி/ ) 32 வயதிற்கு மிகாமலும், எஸ்.சி/ எஸ்.சி.ஏ / எஸ்.டி ஆகிய பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!