Admission of Students for Diploma in Polytechnic Colleges: Perambalur Collector Announcement

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு முழு நேரம் தொழில்பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைகக்கான விண்ணப்ப பதிவு www.tngptc.in www.tngptc.com இணையதளம் மூலமாக 25.06.2021 முதல் 12.07.2021 வரை நடைபெறவுள்ளது

இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மாவட்ட சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.150- விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும். பதிவு கட்டணத்தை கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம்.

தமிழகத்தை நேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து இலவசமாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இணையதளம் மூலமாக 12.07.2021 வரை விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ;ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை சிவில், மெக்கானிக்கல், ECE, EEE, கம்பியூட்டர் பாடப் பிரிவுகளுக்கு சேர்ககை நடைபெற உள்ளது. மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்விக் கட்டணம் வருடத்திற்கு ரூ.2,194- செலுத்த வேண்டும் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்கள். ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் நல்ல கட்டமைப்புடன் கூடிய ஆய்வக வசதி உள்ளது. கடந்த 2020-2021ஆம் கல்வியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூ, மூலமாக சுமார் 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரிக்கு அருகாமையில் மாணவியர்கள் தங்கி பயில அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி இலவசமாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தினுள் குறைந்த கட்டணத்தில் தனி விடுதி உள்ளது. இக்கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, இலவச மடிக்கணினி, அரசு கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் பெற்று பயன்பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு 04328-243200 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9962488005, 8072600082, 9952787062, 8667404459, 8012978060, 9751211929 என்ற அலைபேசி எண்களுக்கோ தொடர்பு கொண்டோ விவரங்களை பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!