Admission of Students in District Government Music School: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ளள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு அரசு, கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2021-2022 நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

குரலிசை, நாதசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 25 வயது வரை உள்ள இருபால் மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம். நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இசைப் பள்ளியில் சேரும் மாணவ. மாணவியர்களுக்குத் தனித்தனி அரசு விடுதி வசதி உள்ளது. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படும்.. அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செல்ல இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.152- மற்றும் பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஆகும். பயிற்சியில் சேர விரும்புவோர் 05.07.2021 முதல் 31.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 98424 89148, 04328 – 275466 என்ற எண்ணகளில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!