டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட வி.களத்தூர் வாலிபர் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதி

schedule
2020-04-02 | 01:36h
update
2020-04-02 | 01:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Admission of V. Kalathur Youth to the coroner’s treatment unit at the Delhi conference

Advertisement

டெல்லி நிஜாமுதீன் நகரில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த
ஜாபர்அலி மகன் அப்துல்ரகுமான் (வயத 29), என்பவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து ஆம்புலன்ஸ் மூலம் உரிய பாதுகாப்புடன் நேற்று அழைத்து வந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை தனிப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் அப்துல் ரகுமானின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்துல்ரகுமான் வீட்டைச் சுற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 05:51:41
Privacy-Data & cookie usage: