பெரம்பலூர்: அதிமுக சார்பில் கோடைக் கால தண்ணீர் பந்தல் திறப்பு!

schedule
2024-04-27 | 17:27h
update
2024-04-27 | 17:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ADMK opens Thanner Pandal near Perambalur!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றிய அதிமுக சார்பில் வி.களத்தூரில், ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த கோடை தண்ணீர் பந்தலை, பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.எவுமான இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் எம்எல்எ பூவை. செழியன் ஆகியோர் முன்னிலையில், அமைப்பு செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அ. அருணாசலம் திறந்து வைத்தார். பின்னர், அங்கிருந்த கட்சியினருக்கும். பொது மக்களுக்கும், நீர் மோர், இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் , எலுமிச்சை சாறு ஆகியவற்றை வழங்கினார்.

Advertisement

வேப்பூர் ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய இணை செயலாளர் கலாவதி கண்ணபிரான், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, காவியா ரவி, தேவையூர் ஊராட்சித் தலைவர் அம்சவள்ளி நடராஜன், அனுக்கூர் செங்கமலை, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 12:53:43
Privacy-Data & cookie usage: