திமுகவை கண்டித்து பெரம்பலூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

schedule
2020-06-01 | 19:27h
update
2020-06-01 | 19:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

ADMK to protest in Perambalur! aganist to DMK

பெரம்பலூரில் நகர அதிமுக சார்பில் திமுக கண்டித்து 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடந்து இழிவாக பேசிவரும் திமுக நிர்வாகிகளை கண்டித்தும், திமுகவினரின் தரக்குறைவான
பேச்சுகளை கண்டிக்காத திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

Advertisement

இதன்படி பெரம்பலூர் ரோவர் ஆர்ச் பகுதியில் அதிமுக நகர செயலாளர் ராஜபூபதி தலைமையில், அதிமுக மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட
பொருளாளர் பூவைசெழியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் உயர் பதவிகளில் உள்ள பட்டியலின மக்களை தொடந்து இழிவாக பேசிவரும்
திமுக நிர்வாகிகளை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சின்னராஜேந்திரன், நிர்வாகிகள் பூவேந்திரன்,மணி, யாயதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல் பெரம்பலூர் 12 வது வார்டில் முன்னாள் நகராட்சி தலைவர் ரமேஷ் தலைமையிலும், 13 வது வார்டில் அதிமுக நகர மகளிரணி செயலாளர் தனலட்சுமி தலைமையிலும், பெரம்பலூர் 1வது வார்டில் கிளை பொறுப்பாளர் தீபன்ராஜ், நகர எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் போஸ்ராஜேந்திரன் தலைமையிலும்,
துறைமங்கலத்தில் நகர துணை செயலாளர் சுப்ரமணி தலைமையிலும், அரணாரையில் வார்டு செயலாளர் அருணா செல்வம் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

படவிளக்கம் :
பெரம்பலூரில் நகர அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்தப்படம். முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், சின்ன.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.05.2026 - 11:47:53
Privacy-Data & cookie usage: