மரத்தில் ஏறிய பின்பு இறங்க தெரியாமல் தவித்த வாலிபர் மீட்பு

schedule
2017-01-03 | 14:56h
update
2026-06-25 | 00:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

After the young men who climbed the tree swayed, knowing descend recovery

பெரம்பலூர் அருகே அரசமரத்தில் ஏறி இறங்க தெரியாமல் நீண்ட நேரம் தவித்த வாலிபரை தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் பத்திரமாக மீட்டனர்.

பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்தவர் விஜயவீரன். இவரது கடைசி மகன் விஜய்பாபு (வயது 22). சற்று மனமுடைந்த காணப்பட்ட அவர் இன்று காலை 8 மணி அளவில் அதே ஊரில் சுடுகாட்டிற்கு அருகே உள்ள தூங்கானி கருப்பு கோயிலின் அரசமரத்தில் ஏறிய அவர் உறவினர்கள் அழைத்தும் இறங்காமல் மரத்திலேயே அமர்ந்துள்ளார். நீண்ட நேரம் இறங்கி வர உறவினர்கள் அழைத்தும் வராததாலும், மரத்தின் உச்சிக்கு சென்றதால், மரத்தில் இருந்து கீழ் நோக்கி இறங்க தெரியாமல் விழித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு மற்றும், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் வாகனத்தை மரத்திற்கு அடியில் நிறுத்தினர். மரத்தின் மீது சில வீரர்களும் ஏறிய போது விஜய்பாபு சற்று மனமுடைந்து காணப்பட்டுள்ளார். பின்னர், சமயோசிதமாக தீயணைப்பு வீரர்கள் காவல் துறையினர் வந்த வாகனத்தின் மீதும், தீயணைப்பு வாகனத்தின் மீதும் வலையை விரித்து பிடித்து கொண்டு பாதுகாப்பாக இறக்கி காப்பாற்றினர். இதனால், நடக்க இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ட்டது.

மீட்கப்பட்ட விஜய்பாபுவிற்கு முதலுதவி செய்து, அவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 00:35:42
Privacy-Data & cookie usage: