இந்திய விமானப்படையில் அக்னி வீர்வாயு திட்டம் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2023-08-06 | 13:31h
update
2023-08-06 | 13:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Agniveer program in Indian Air Force; Perambalur Collector Information!

மாதிரி படம்

இந்திய இராணுவத்தில் அக்னி வீர் வாயு என்ற திட்டத்தின் மூலம் விமானப் படையில் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவ மாணவிகளுக்கு 17.08.2023 வரை http://agmo[atjvayu.cdac.in என்ற இணையதளம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இந்திய விமானப்படையின் இந்த அறிவிப்பு குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிக அளவில் தெரியப்படுத்தும் வகையில் அனைத்து கல்லூரிகளில் அறிவிப்பு பலகைகளிலும் விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் குறித்த தகல்வகள் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர்களும் இத்திட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஆண், பெண் என இருபாலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்கள் நம் நாட்டின் விமானப் படையில் சேர்ந்து சேவையாற்றும் இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.09.2026 - 02:10:49
Privacy-Data & cookie usage: