எண்ணெய் பனை சாகுபடிக்கு அதிக அளவில் மானியம், வேளாண்மை துறை விவசாயிகளுக்கு மானியம்

schedule
2017-11-03 | 00:51h
update
2026-07-05 | 06:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

agricultural Dept. Call for farmers to oil palm cultivation

பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை விடுத்துள்ள அறிவிப்பு :

Advertisement

தேசிய எண்ணெய்பனை இயக்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் எண்ணெய்பனை விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அதிக மானியம் வழங்க மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டரில் எண்ணெய்பனை சாகுபடி செய்ய முதலாமாண்டு கன்றுகளை நடவு செய்ய ரூ.12,000- முதல் மூன்று ஆண்டுகளுக்கு பராமரிப்பிற்கு ரூ.5000-; முதல் 3 ஆண்டு பயிரில் ஊடு பயிர் செய்ய ரூ.5000 ; டீசல் பம்புசெட் அமைக்க ரூ.15,000 ; போர்வெல் அமைக்க ரூ.50,000 : மண்புழு உர உற்பத்திக்கு ரூ.15,000 ; எண்ணெய்பனை மரம் ஏறும் ஏணிக்கு ரூ.3,000 ; எலிவலைக்கு ரூ.5,000- எண்ணெய்பனை இலை வெட்டும் கருவி விநியோகத்திற்கு ரூ.1,500 – மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் விவசாயிகளின் பயிற்சிக்கு ரூ.24,000- நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தில் சேர்வதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:07:37
Privacy-Data & cookie usage: