நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் ரூ.40 இலட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கல்

schedule
2017-04-13 | 13:10h
update
2026-06-27 | 00:52h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Agricultural equipment worth Rs 40 lakh on behalf of Watershed Development Agency issuance

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

Advertisement

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் 494 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் வழங்கினார்.

அதன்படி, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் சார்பில் உற்பத்திச் சார்ந்த திட்டத்தில் 122 பயனாளிகளுக்கு ரூ.7.7 இலட்சம் மதிப்பீட்டில் விசை தெளிபான்களும், 194 பயனாளிகளுக்கு ரூ.8.9 இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரி தெளிபான்களும், 56 பயனாளிகளுக்கு ரூ.13.4 இலட்சம் மதிப்பீட்டில் தீவனப்புல் நொறுக்கும் இயந்திரங்களும், 21 பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் பால் கறவை இயந்திரங்களும், 101 பயனாளிகளுக்கு ரூ.5.05 இலட்சம் மதிப்பீட்டில் புறக்கடை கோழி வளர்ப்பிற்கான கூண்டுகளும் மொத்தம் 494 பயனாளிகளுக்கு ரூ.40 இலட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை, புதுவாழ்வுத்திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 00:52:32
Privacy-Data & cookie usage: