Agricultural Mechanization Scheme: Collector’s call for farmers

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு 2017-18 நிதியாண்டில் 8 குதிரை திறன் முதல் 70 குதிரைத் திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டை வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் முதலான வேளாண் இயந்திரங்களும் கருவிகளும் வாங்கிக் கொள்ள விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிக பட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெரம்பலூh; மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டில் ரூ.19.35 இலட்சம் மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க விரும்பும் குழுக்களோ அல்லது தொழில் முனைவோரோ, ரூ.25 இலட்சம் மதிப்புடைய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வாங்கி வாடகை மையங்கள் அமைக்க முன் வந்தால் அவர்களுக்கு 40 சதவிகித மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் உபயோகம் குறைவாக உள்ள கிராமங்களில், கிராம அளவிலான குழுக்கள் ரூ.10 இலட்சத்திற்கு குறையாத மதிப்புடைய பண்ணை இயந்திரங்களை வாங்கி, வாடகை மையங்கள் நடத்தலாம். இதனை விவசாயக் குழுக்கள், உழவா; உற்பத்தியாளா; அமைப்புகள் போன்றவை மேற்கொள்ளலாம். நடப்பாண்டில் பெரம்பலூh; மாவட்டத்தில் நீடித்த புஞ்சை நில சாகுபடிக்கான திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள குழுக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு ரூ.48.00 இலட்சம் மானியத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர், மாவட்ட செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அல்லது சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா அடங்கல் நகல், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, ஜாதிச் சான்று நகல், டிராக்டரில் இணைத்து இயக்கக் கூடிய கருவியாக இருந்தால் டிராக்டரின் பதிவுச் சான்று நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் போன்றவற்றினை இணைத்து வழங்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மூதுரிமை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, முன்னுரிமை அடிப்படையில் கருவிகள் வாங்க அனுமதி வழங்கப்பட்டு பின்னர் மானியம் வழங்கப்படும். விவசாயிகள் தாங்கள் விரும்பும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கான முழுத்தொகையையும் வங்கி கேட்பு வரைவோலை மூலமாக உரிய உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கிட வேண்டும்.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தில் பெரம்பலூh; மாவட்டத்திற்கு தனிப்பட்ட இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள நடப்பாண்டில் ரூ. 19.35 இலட்சமும், வாடகை மையங்கள் அமைக்க ரூ.108.00 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மானிய விலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக வேளாண்மைப் பொறியியல் துறையில் பதிவு செய்து, பயன்பெறலாம்.

கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கி, இயந்திரமயமாக்கலை ஊக்குவித்து, செலவினைச் சிக்கனப்படுத்த கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் நிறுவப்பட உள்ளது. இத்திட்டம் 40 சதவிகித மானியத்தில், அதிக பட்சமாக ரூ.60.00 இலட்சம் மானியத்துடன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் மூலம் அமைக்கப்பட உள்ளது.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் 5 முதல் 10 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் பெற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் இலவச மின் இணைப்பு பெற்றிருந்தால் அதனைத் துறக்க முன்வர வேண்டும். இலவச மின் இணைப்பிற்கான விண்ணப்பம் அளித்திருந்தால் அதனைத் திரும்ப பெறுவதற்கு சம்மதக் கடிதம் அளிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டு ஆர்வமுடைய விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

மேற்கூறிய விதிமுறைகளின்படி வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் ஆர்வமுடைய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் ஆகியவற்றில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்திட தொழில் நுட்ப ரீதியான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து இறுதி செய்யப்படும்.

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அமைத்திட வேளாண் பொறியியல் துறை மூலம் நிறுவனங்கள் மற்றும் விலை ஒப்புதல் செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 10 சதவீத பங்களிப்பு தொகை செலுத்தும் பட்சத்தில் விவசாயிகளின் விருப்பத்திற்கேற்றவாறு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் 90 சதவீத அரசு மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்து தரப்படும்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறவும், விபரங்கள் அறியவும், உதவி செயற்பொறியாளர் (வே.பொ), எளம்பலூர் தண்ணீர் பந்தல், பெரம்பலூர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகலாம்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!