பெரம்பலூரில் அதிமுக 49 ஆண்டு துவக்க விழா: ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமையில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

schedule
2020-10-17 | 16:28h
update
2020-10-17 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIADMK 49th year inauguration in Perambalur: Respect to the statues of leaders led by R.T.Ramachandran M.L.A., by wearing garlands.

அ.தி.மு.கவின் 49-வது துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலர் ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement

அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடும் வகையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழ்செல்வன் மற்றும் கட்சியினர் முன்னிலையில் மாவட்டச் செயலர் ஆர்.டி. இராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். முன்னதாக, அருகே இருந்த கொடிக்கம்பத்தில் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலர்கள் (ஆலத்தூர்) என்.கே.கர்ணன், வேப்பூர் பா. கிருஷ்ணசாமி, வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், பெரம்பலூர் செல்வக்குமார், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, குரும்பாபாளையம் சி.நாகராஜன், முன்னாள் பாடாலூர் ஊராட்சி தலைவர் ஆர். வேல்முருகன், லாடபுரம் கருணைராஜா, பூலாம்பாடி பேரூர் செயலாளர் வினோத், அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிராமம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 03:14:03
Privacy-Data & cookie usage: