AIADMK councilors walk out of Perambalur, condemning councilors, including chairman, for leaving cinema
பெரம்பலூர் நகராட்சியின் கூட்டத்திற்கு இன்று அழைப்பின் பேரில், அனைத்து கவுன்சிலர்களும் வந்திருந்தனர். ஆனால், திடீரென நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், உள்ளிட்ட திமுகவினர் , உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு சென்றனர். இதனால், திமுக, சுயேட்சை மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் அப்செட் ஆனார்கள். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கள் பணி குறித்து விவாதிக்காமல், காலை 11 மணி காட்சிக்கு படத்திற்கு தியேட்டருக்கு சென்றதை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.