ஊராட்சி ஆவணங்களை ஒப்படைக்க வலியுறுத்தி அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி. இராமச்சந்திரன், கலெக்டரிடம் மனு

schedule
2021-06-29 | 05:09h
update
2021-06-29 | 05:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIADMK district secretary R.T. Ramachandran, Petition to the Perambalur Collector

பெரம்பலூர் அருகே கொளத்தூர் ஊராட்சியின் ஆவணங்களை மீண்டும் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியாவிடம் அதிமுக மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த வித்யா உள்ளார். அவர்கள் மக்களின் கோரிக்கைகளை உடனுக்கு செய்து ஊராட்சி நிர்வாகத்தை குறைபாடின்றியும், சிறப்பாக மக்கள் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 18ம்தேதி ஊராட்சி அலுவலக ஆவணங்களை எந்த வித காரணமின்றி ஊரக வளர்ச்சிதுறையினர் எடுத்து சென்றுவிட்டனர். ஏன் என தலைவர் வித்யா கேட்டதற்கு சரியான காரணங்கள் சொல்ல வில்லை. இது சம்மந்தமாக விசாரனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஊராட்சி ஆவணங்களை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிப்பு நிகழ்ச்சியின்போது அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணன், ஊராட்சி தலைவர் வித்யா, இளையராஜா, காரை ஊராட்சி தலைவர் கலையரசன் மற்றும் கிராமத்தினர் உடனிருந்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:17:30
Privacy-Data & cookie usage: