ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா : பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம்

schedule
2018-02-24 | 07:12h
update
2019-02-24 | 05:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIADMK General Secretary J. Jayalalithaa’s 70th birthday celebration in Perambalur

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாவட்ட செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் இன்று வெகு விமரிசையாக முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராம கிளைக் கழக நிர்வாகிகள் கொடி கம்பத்திற்கு அதிமுக கட்சியின் வர்ணம் பூசி புத்தம் புதிய கொடியை ஏற்றி, ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணங்கினர். பின்னர், இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Advertisement

அதே போன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அருகில் அலங்கரிப்பட்டு இருந்த ஜெ.ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். அப்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் எம்.என்.ராஜாராம் தலைமையில் இன்று பிறந்த குழந்தைகள் 3 பேருக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் கோ.பெருமாள் ஆகியோரது சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பொருள் உதவி, நிதி உதவி, அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொறுப்பாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பபட்டது. பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழச்சிகளின் போது ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், முன்னாள் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கே.சி பெரியசாமி, ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குரும்பாபாளையம் நாகராஜன், பெரம்பலூர் முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் சின்ன.ராஜேந்திரன், மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், கிளைக்கழக வார்டு உறுப்பினர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு இருந்தது. இன்று ஆங்காங்கே ஜெ.ஜெயலலிதாவின் புகழ் பாடல்கள் கிராமங்கள் தோறும் மைக் செட்டுகளில் ஒலித்து கொண்டு உள்ளது.

நாளை பல்வேறு இடங்களில் முன்னாள் முதமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 70 வது பிறந்த முன்னிட்டு நாளை பொதுக்கூட்டங்கள் நடத்தபட்டு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:22:52
Privacy-Data & cookie usage: