பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவி யாருக்கு! எம்.பியிடம் இருக்கும் பதவி பறிக்கப்படுமா ?

schedule
2017-02-19 | 10:43h
update
2026-06-24 | 15:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIADMK in Perambalur the post of Secretary of the Union to whom!

பெரம்பலூர் : அ.இ.அ.தி.மு.க கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் மருதைராஜா. இவர், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

Advertisement

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உட்கட்சி அணி பூசலில் ஓ.பன்னீர் செல்வம் அணி, வி.கே சசிகலா அணி என அதிமுக இரண்டாக பிளவு பட்டது. அதில், மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரனும், மாவட்ட மாணவரணி செயலாளரும், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான இரா.தமிழ்சசெல்வன் ஆகிய இருவரும் வி.கே. சசிகலா அணியில் சேர்ந்து ஆட்சியை பிடிப்பதில் பங்கு கொண்டனர்.

ஆனால், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பியும், பெரம்பலூர் ஒன்றிய செயலாளருமான மருதைராஜா ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் அவரது பதவி விரைவில் பறிபோக வாய்ப்பு உள்ளது. பெரம்பலூருக்கு புதிய ஒன்றிய செயலாளர் யார்? என்பது கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.

பெரம்பலூர் ஒன்றியத்தின் புதிய செயலாளர் அறிவிப்பு தலைமைக் கழகத்தில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 15:35:25
Privacy-Data & cookie usage: