திமுக அரசை கண்டித்து, பெரம்பலூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

schedule
2022-07-26 | 16:43h
update
2022-07-26 | 16:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

AIADMK protests in Perambalur to condemn the DMK government!

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை முன்பு, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் சிவபதி மற்றும் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வரகூர் ஆ.அருணாச்சலம் தலைமையில், திமுக அரசை கண்டித்து அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி வரவேற்றார்.

Advertisement

கூட்டத்தில், திமுக அரசை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரியும், கண்டன கோசங்கள் எழுப்பி, ஆர்பாட்டம் நடத்தினர்.

இதில் முன்னாள் எம்.பிக்கள் சந்திரகாசி, மருதைராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.தமிழ்ச்செல்வன், பூவை.செழியன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.ராஜாராம், மாவட்ட பொறுப்பாளர்கள் ராணி, ராஜேஷ்வரி, லட்சுமி, அணிச் செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், கர்ணன், ரவிச்சந்திரன் செல்வகுமார், செல்வமணி, சந்திரகாசி, ரமேஷ், சசிக்குமார் மற்றும் கீழக்கரை து.பன்னீர்செல்வம், குன்னம் குணசீலன், குரும்பாபாளையம் சி.நாகராஜன், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர் கலந்து கொண்டனர். இதனால், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், தொண்டர்களால், நிரம்பி வழிந்தது. ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:08:26
Privacy-Data & cookie usage: