AIADMK should try not to disappoint people by relying on DMK’s impossible false election promises: RT Ramachandran MLA speech

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் (தெற்கு )ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், குன்னம் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இணை செயலாளர் சித்ரா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் செந்தில்ராஜன், அமுதாமுருகேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:

திமுக தலைவர் முக. ஸ்டாலினால் துண்டு சீட்டு இல்லாமல் பேசவே முடியாது. உடன் பிறந்த அண்ணன் முக.அழகிரியே சொல்லிவிட்டார், அவர் முதலமைச்சர் ஆகமாட்டார் என்று, உடன்பிறந்தவரின் ஓட்டு கூட ஸ்டாலினுக்கு கிடைக்காது என தெரிகிறது. அதோடு கடந்த குன்னம் தொகுதி வரலாற்றில், வரகூர் தொகுதியாக இருந்தில் இருந்து, நடந்த முடிந்த 10 தேர்தலில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அப்போதைய கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட போது தோல்வியை தழுவி உள்ளது. வேப்பூர் ஒன்றியம் இரட்டை இலை சின்னம் போட்டியிடும் போதெல்லாம் வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே, பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி நடைமுறைக்கு சாத்தியமில்லாத 2 ஏக்கர் நிலம் போல, கல்விக்கடன், பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யாக வாக்குறுதி கொடுத்து ஏழை எளிய மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றது. அதை இம்முறை மக்களிடம் அதிமுக தொண்டர்கள் எடுத்துரைத்து மீண்டும் வேப்பூர் ஒன்றியம் அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க பாடுபடவேண்டும் என்றும், மழைக்காலத்தில் வரும் ஈசல்கள் போல, தேர்தல் நேரத்தில் திமுக குடும்ப ஆட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து குரங்கு வித்தைகாரன் போன்று, டீ குடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, கரும்பு காட்டில் நடப்பது, சபை கூட்டங்களை நடத்துவது என பல்வேறு வித்தைகளை செய்து காட்டியும், மக்களின் அறியாமை, ஏழ்மையை பயன்படுத்தி பொய்யான வாக்குறுதிகளால் வெற்றி பெறுவதை வரும் தேர்தலில் வீழ்த்தி, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள், அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்லியும், திமுகவின் பொய்பிரச்சாரத்தையும், குடும்ப ஆட்சியையும், ஜனநாயகத்தையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து அதிக வாக்கை மக்களிடம் இருந்து பெற வேண்டும் என பேசினார். முன்னதாக, அவைத்தலைவர் உதயசூரியன் வரவேற்றார்.

கூட்டத்தில், மாநில மீணவரணி இணை செயலாளர் பி. தேவராஜன், பெரம்பலூர் நகர செயலாளர் ஆர். ராஜபூபதி, மாவட்ட வர்த்தகர் அணி பிரிவுச் செயலாளர் ஏ.கே ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் தங்க.பாலமுருகன், மாவட்ட பேரவை செயலாளர் குன்னம்.சி.குணசீலன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.செல்வமணி உள்ளிட்டட பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னாள் குன்னம் ஊராட்சித் தலைவர் இளங்கோவன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!