இந்திய விமானப் படையில் ஏர்மென் பணி: பெரம்பலூர் கலெக்டர் தகவல்!  

schedule
2022-05-19 | 14:05h
update
2022-06-03 | 12:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Airman service in the Indian Air Force : Perambalur Collector Information!

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தேர்வு மையம் வாயிலாக இந்திய ஏர்மென் பணிக்கு விரைவில் தகுதி வாய்ந்த ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்காணும் பணிக்கு விருப்பமுள்ள கீழ்க்கண்ட தகுதிகளையுடைய ஆண்கள் மட்டும் தங்களது விவரங்களை Google Form – இல் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisement

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKvsNW8mWFlk0jcOIVm-G4Md1NNQDSlMBCMXXdOXhu-G0jag/viewform?vc=0&c=0&w=1&flr=0

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 17 முதல் 21 வயதிற்குட்பட்ட (ஆண்கள் மட்டும்) 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தினை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 17:09:26
Privacy-Data & cookie usage: