All parties against BJP unite to face 2024 elections! VCK leader Thol. Thirumavalavan!

வேளாண்மை சட்டம் திரும்ப பெற்றதாக பிரதமர் அறிவித்தது விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி. கடந்த ஒராண்டாக விவசாயிகள் மழை வெயில் என பாராமல் போராடினர். அதற்கு கிடைத்த வெற்றிதான் தற்போது பிரதமர் அறிவித்துள்ள வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்றதற்கு, என, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழர் எழுச்சி நாள் சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிரபாகர், சதானந்தம், யோசேப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்திரயராஜ் வரவேற்றார். விழாவில் காங்கிரஸ் ரங்கநாதன், தமுமுக மாநில செயலாளர் சலிமுல்லாகான், அதிமமு தலைவர் பசும்பொன் பாண்டியன், இந்திய கம்யூ பெருமாள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உட்பட பலர் சிறப்புறையாற்றினர்.

கருத்தரங்கில் ஏற்புரையாற்றிய சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலை கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண்மை சட்டம் திரும்ப பெற்றதாக பிரதமர் அறிவித்தது விவசாயிகளுக்கு மகத்தான வெற்றி. கடந்த ஒராண்டாக விவசாயிகள் மழை வெயில் என பாராமல் போராடினர். அதற்கு கிடைத்த வெற்றிதான் தற்போது பிரதமர் அறிவித்துள்ள வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்றதற்கு, இதற்கு கடுமையாக போராடிய உத்திரபிரேசதம், அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டுகளை தெரிவிக்கிறது. வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.

ஆனால் இந்நேரத்தில் உத்திரபேரதேசம், அரியானா மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலை வைத்துதான் பிரதமர் தேர்தல் நோக்குடன் வேளாண்மை சட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.திரிபுராவில் நடந்த வன்முறையை கண்டித்து சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக களம் இறங்கி போர்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தி.மு.க.,அரசு சிறப்பாக செயல்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பிரதமர் முடிவு செய்கிறார். அரசியல் ஆதாயம் பார்க்க முயல்கிறார், அவர் அரசியல் ஆதாயம் பார்க்க நினைத்தாலும் தற்போது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்.. பா.ஜ. கட்சியை எதிர்ககும் அனைத்து கட்சிகளும் தற்போது ஒரணியாகி வருகிறோம். பா.ஜ.,வை தனிமை படுத்த 2024 தேர்தலுக்கு தற்போதே அனைத்து மாநில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!