All those in ADMK should be appointed to sign a green ink : Minister Manikantan

அதிமுகவில் உள்ள அனைவரும் பச்சை மையில் கையொப்பம் போடும் அளவில் பதவி பெற வேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக ஒவ்வொரு நிர்வாகிகளும் புதிய உறுப்பினர் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினால் உள்ளாட்சியில் நாம் அமோக வெற்றி பெறலாம், என தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் செ.முருகேசன் தலைமையில் நடந்தது. நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா வரவேற்றார். கக்ஷட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட வேட்பாளராக தேர்தல் நின்று வெற்றி பெற்று இன்று அமைச்சராக உள்ளேன். நான் திமுகவிலிருந்தோ, கமல் ரசிகர் மன்றத்தலிருந்தோ, ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்தோ வந்தவன் அல்ல. எனது தாய் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டு மாவட்ட பிரதிநிதியாக இருந்தவர்.

நாங்கள் தொன்றுதொட்டு அதிமுகவில் இருந்து வருகிறோம். நான் எனது தந்தை, எனது தாய் ஆகியோர் யாரேனும் யாருக்காவது துரோகம் செய்தது உண்டா? எந்த வேட்பாளரை கட்சி அடையாளம் காட்டினாலும் கழகம் கை காட்டியவருக்காக உண்மையாக உழைத்துள்ளோம். திமுக ஆட்சியில் ஓட ஓட விரட்டி பல வழக்குகளை சந்தித்தவன் நான். தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். நான் நாகரீகமாக விமர்சனம் செய்ய தொடங்கினால் பலரும் ஊரைவிட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படும். அம்மாவின் கொள்கை திமுகவை எதிர்ப்பது. ஆனால் டிடிவியுடன் சேர்ந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து நம்மை எதிர்க்கின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை விமர்சித்தால் நல்லா இருக்க மாட்டார்கள். நாங்கள் மக்களுக்கு செய்ததை தெரிவிக்கிறோம். நீங்கள் தெரிவியுங்கள் பார்க்கலாம்? தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்எல்ஏக்கள் கட்டாயம் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. சபாநாயகர் உரிமையில் யாரும் தலையிட முடியாது. 99 சதவீதம் வாய்ப்பு கிடையாது. தங்கதமிழ்செல்வன் எங்களிடம் கெஞ்சியது கொஞ்சநஞ்சமல்ல. தென்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் என்னிடம் தொடர்ந்து பேசி கொண்டுதான் இருக்கின்றனர்.

33 வார்டில் டிபாசிட் வாங்க முடியுமா?

ராமநாதபுரம் நகராட்சியில் டிடிவி அணியினர் 33 வார்டில் ஒரு வார்டிலாவது டிபாசிட் வாங்க முடியுமா? அதிமுக தொடர்ந்து 5 ஆண்டு தடையின்றி ஆட்சியில் இருக்கும். அதிமுக செய்து வரும் மக்கள் நலன் திட்டத்தால் மீண்டும் அதிமுக ஆட்சியே வரும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளில் நடக்காத வகையில் வைகையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு 62 கண்மாய்கள், நகராட்சி பகுதிகளில் ஊரணிகள் நிரப்பப்பட்டுள்ளன.

தற்போது நிலத்தடி நீர் அதிகரித்து வீடுகளில் கிணற்றில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அந்தளவு மக்கள் மனதை குளிரவைத்துள்ளோம். அதிமுகவில் உள்ள ஒவ்வொருவரும் பச்சை மையில் கையொப்பமமிட வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு ஒவ்ெவாரு நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் என்னிடம் தெரிவியுங்கள் நான் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

விவசாய அணி செயலாளர் கர்ணன், மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், முனியாண்டி, முத்தையா, மதிவாணன், அந்தோணிராஜ், மாவட்ட மத்திய கக்ஷட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, தலைமை கழக நிர்வாகி சவுந்திரவள்ளி, நகர் செயலாளர் ராஜேந்திரன், சீமான் மரைக்காயர், முன்னாள் நகராட்சி தலைவர் ராமமுர்த்தி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் சாமிநாதன், தொகுதி இணை செயலாளர் தஞ்சி சுரேஷ்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!