Alliance with BJP: IJK founder Parivendar MP interviewed in Perambalur!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்தை சந்தித்த பெரம்பலூர் பாராளுமன்ற எம்.பியும், ஐஜேகே நிறுவனருமான பாரிவேந்தர், தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம், வெங்கடாசலபுரத்தில் உள்ள மான்ய நடுநிலைப்பள்ளி இ. வெள்ளனூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கி தலா ரூ. 31.56 லட்சம் மதிப்பிலும், பைத்தாம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 33 லட்சத்திலும், துறையூர் அரசு மருத்துவமனை முன்பு கூடுதலாக ரூ. ஒரு லட்சம் நிதி ஒதுக்கி 7 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடையும், குன்னுப்பட்டி கிராமத்தில் ரூ. 18.50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கி பெரம்பலூர் எம்.பியின் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதி 2021 -2022 மூலம் மாற்றங்கள் செய்து பணிகள் தொடங்க் பரிந்துரை கடிதம் அளித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தற்போது ஐஜேகே கட்சி பாஜக உடன் கூட்டணியில் உள்ளது. வரும் தேர்தலில் அவர்களுடன் இணைந்திருப்போம் என்ற அவர், பள்ளிக் கூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு கூடுதலாக தனது எம்.பி நிதியின் கீழ் அதிக அளவில் ஒதுக்கி இருப்பதாகவும், தெரிவித்தார்.

பாஜக கூட்டணியான அதிமுக வேட்பாளரை எதிர்த்து, திமுக கூட்டணியில் நின்று பெரம்பலூர் தொகுதியில் எம்.பியாக வெற்றி பெற்ற பாரிவேந்தர், கல்விக் கடன், பயிர்க்கடன் தள்ளுபடி உள்பட பல தேர்தல் அறிவிக்கைகளை விடுத்த அவர், அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணிக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளதை செய்தியாளர்கள், காலத்தின் கோலம், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, என கமெண்ட செய்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!