ஆல்மைட்டி பள்ளியின் 2ஆம் ஆண்டு விளையாட்டு விழா.

schedule
2017-02-04 | 16:40h
update
2026-06-24 | 03:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Almighty School’s 2nd Annual Sports Festival.

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கே.சிவகாமி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை வகித்தார்.

முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் இருந்து ஜோதி எடுத்து வந்து பள்ளி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று போட்டிகளை கொடி ஏற்றத்துடன் தொடங்கினர். பிரமீடு அமைத்தல் 100, 200, 400, 600 மீட்டர் ஓட்டப் பந்தயம், லோகோ சர்க்யூட், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

Advertisement

திருச்சிராப்பள்ளி மாவட்ட மின்வாரிய கணக்குப்பிரிவு அலுவலர் ஆர்.வடிவேல் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது இங்குள்ள மாணவ மாணவிகள் விளையாட்டில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். மேலும், நன்றாக பயிற்சி பெற்று ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பல்வேறு தகுதிகளில் முன்னேறுவதற்கு உருவம் ஒரு தடையில்லை நல்ல எண்ணங்களோடு பயிற்சி எடுத்து முன்னேற வேண்டும் என்று பேசினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் பங்குதாரர்கள் மற்றும் ஆசிரியைகள் ஏற்பாடு செய்தனர். பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 03:09:29
Privacy-Data & cookie usage: