பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா!

schedule
2021-04-14 | 15:31h
update
2021-04-14 | 15:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ambedkar Birthday Celebration on behalf of Perambalur Lakshmi Hospital!

பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை சார்பில், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் 130 -வது பிறந்த நாள் விழா லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல்
சயின்சஸ் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

Advertisement

விழாவுக்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பெ.நடராஜன் தலைமை வகித்தார். மாணவ பேச்சாளர் நிரூபன் கார்த்திக் வரவேற்றார். விழாவில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை தலைவர் இரா.கிருட்டிணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். விழாவில், லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் கருணாகரன், டாக்டர் ஜெயலட்சுமி, வழக்கறிஞர் காமராஜ், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆறுமுகம், கவிஞர் அகவி, டாக்டர் செந்தில், சித்தா டாக்டர் செந்தமிழ்ச் செல்வி, பேராசிரியர் செல்வகுமார், திமுக பேச்சாளர் எசனை ஆறுமுகம் உட்பட பலர் பேசினர். விழாவில், அம்பேத்கர் குறித்து மாணவ மாணவியர்களின் கவிதை, பாடல், நடனம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை பேராசிரியர் குமணன் தொகுத்து வழங்கினார். லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லூரி முதல்வர் தங்கராசு நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 03:07:14
Privacy-Data & cookie usage: