பெரம்பலூரில், அம்பேத்கர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவிக்கவில்லை: விசிக கட்சியினர் குமுறல்

schedule
2017-12-06 | 13:24h
update
2026-06-09 | 01:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Ambedkar’s 61st memorial is celebrated in various parts of Perambalur district today

இன்று அம்பேத்காரின் 61வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக பாதுகாப்பு அணிவகுப்பு பேரணி மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் , சிறப்புஅழைப்பாளராக மண்டலசெயலாளர், நெறியாளர் சு.திருமாறன், மாநிலசெயலாளர் வீர.செங்கோலன் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் சங்குபேட்டையில் தொடங்கிய சமூக பாதுகாப்பு அணிவகுப்பு கடைவீதி வழியாக பழையபேருந்துநிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை சென்றடைந்தது.
அங்கு அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

முன்னாதாக, மண்டல செயலாளர் சு. திருமாறன் பேசியதாவது: மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்டு கொண்டு இருக்கும் அரசுகள் நாளிதழில் விளம்பரம் செய்யவில்லை. கர்நாடக அரசு செய்துள்ளது. இது வருத்தம் அளிக்கிறது.

மேலும், இன்று அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பிலும், மற்றும் அக்கட்சியில் உள்ள ஆதிராவிடர்கள் கூட அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை.

சமூகம் உயர்வதற்காக பாடுபட்ட அம்பேத்கரை புறக்கணிப்பதிலே அவர்களுடைய அக்கறை என்ன என்று தெரிந்து கொள்ளலாம் என பேசினார்.

மாவட்டசெய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார், இ.ச.பே மாநில துணைச் செயலாளர் ராசித் அலி, மாவட்ட துணைச் செயலாளர், ந.கிருஷ்ணகுமார், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதிச் செயலளார் வழக்கறிஞர் ரத்தினவேல், மாவட்ட அமைப்பாளர் து.இனியன், எசனை காமராஜ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொணடர்கள் அணிவகுப்பபில் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.06.2026 - 01:32:18
Privacy-Data & cookie usage: