பெரம்பலூர் அருகே அம்மா மினி கிளினிக் : எம்.எல்.ஏக்கள் திறந்து வைத்தனர்.

schedule
2021-02-21 | 16:14h
update
2021-02-21 | 16:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Amma Mini Clinic near Perambalur: MLAs open.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய கவுன்சிலர் பிரியாமாமுண்டிதுரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான செல்வக்குமார், மாவட்ட கவுன்சிலர் தேவகி வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார்.

குன்னம் எம்எல்ஏ ஆர்.டிஇராமச்சந்திரன் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். எம்எல்ஏ தமிழ்செல்வன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம், அம்மா ஊட்டசத்து பெட்டகம், தொற்றா நோய் தடுப்பு மாத்திரை, வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை தடுப்பு மாத்திரை, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement

விழாவில் ஆவின் இயக்குநர் மாமுண்டிதுரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வடிவேல், ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி சின்னதம்பி,
தேசிய நலவாழ்வு குழும உதவி திட்ட மேலாளர் டாக்டர் கலைமணி, மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சூரியக்குமார் வரவேற்றார். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 14:19:18
Privacy-Data & cookie usage: