பெரம்பலூர் அருகே விபத்து ஒருவர் பலி! 14 பேர் படுகாயம்

schedule
2017-07-20 | 15:26h
update
2026-04-10 | 02:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An accident killed near Perambalur 14 people were injured

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் லாரியின் பின் பகுதியில் வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 14 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

திருச்சி மாவட்டம், வாழ வந்தான் கோட்டை, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 26 பேர் ஒரு வேனில் சென்னையில் உள்ள இலங்கை துதரகத்தில் தங்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை புதுப்பித்து கொண்டு, மீண்டும் வேனில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வேன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர் பகுதியில் வந்த போது முன்னே சென்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் வேன் மோதியது.

இந்த விபத்தில் திருச்சி வாழ வந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பாலசிங்கம் மகன் கணேசன் (வயது 50), என்பவர் உயிரிழந்தார். மேலும் சித்ராதேவி, நல்லுசாமி, வைரவபாலகவுரீசன், கேவீஸ்வரன் உட்பட 14 பேர் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வேன் டிரைவர் கண்யர்ந்து தூங்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.04.2026 - 02:14:23
Privacy-Data & cookie usage: