பெரம்பலூர் அருகே எலக்ட்ரிசியன் கிணற்றில் தவறி விழுந்து பலி! போலீசார் விசாரணை!!

schedule
2023-02-15 | 12:12h
update
2023-02-15 | 12:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An electrician fell into a well near Perambalur and died! Police investigation!!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிரமத்தை சேர்ந்த தங்கராசு மகன் கமலக்கண்ணன் (25), எலக்ட்ரிசியன், மின்வாரியத்தில், எசனை பிரிவில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார். ஊருக்கு செல்வதாக தன் தாய் ராணியிடம் கூறிவிட்டு நேற்று வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடினர். இன்று காலை கீழக்கரை கிராமத்தில் உள்ள பெரியண்ணன் என்பவரது வயலில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.

Advertisement

தகவல் அறிந்த பெரமபலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிணற்றில் கிடந்த கமலக்கண்ணின் உடலை, தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கமலக்கண்ணனுக்கு நீச்சல், தெரியாமல் இருந்த நிலையில், கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து இருக்காலம் என்றும், வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:31:31
Privacy-Data & cookie usage: