An indoor summer training camp at Perambalur District Stadium

schedule
2017-04-22 | 16:07h
update
2026-06-27 | 06:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An indoor summer training camp at Perambalur District Stadium || பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் இருப்பிடமில்லா கோடை கால பயிற்சி முகாம்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :

தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் இருப்பிடமில்லா கோடை கால பயிற்சி முகாம் 26.04.2017 முதல் 16.05.2017 வரை 21 நாட்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

Advertisement

இப்பயிற்சி முகாமில் கால்பந்து, கையுந்துப்பந்து, கபடி, தடகளம், கைப்பந்து, டேக்வாண்டோ, சிலம்பம், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முகாம் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இருவேளையும் நடைபெறும்.

முகாமில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள்
வழங்கப்படும்.

ஆகவே பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் உடற்திறனையும், விளையாட்டுத் திறனையும் மேம்படுத்தி பயன்பெறலாம். மேலும் தகவல்களுக்கு 8220999499 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 06:48:05
Privacy-Data & cookie usage: