பெரம்பலூர் அருகே கிணற்றில் முதியவர் சடலமாக மீட்பு!

schedule
2022-11-15 | 15:36h
update
2022-11-15 | 15:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An old man’s body was recovered from a well near Perambalur!

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம், தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (70), நேற்று வீட்டை வெளியே சென்றவர் வெகுநேரமாகியும், வீடு திரும்பவில்லை. பின்னர், அக்கம்பக்கத்தினர். உறவினர்கள் தேடிப்பார்த்த போது, எசனை காட்டுமாரியம்மன் அருகே உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் முதியவரின் செருப்பு இருந்தது. இதைக் கண்டு சந்தேகம் அடைந்து, அவர்கள் பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 07:52:08
Privacy-Data & cookie usage: