பெரம்பலூர் அருகே கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் : போலீசார் விசாரணை

schedule
2018-02-09 | 07:50h
update
2026-07-04 | 21:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An unidentified male body in the well near Perambalur: Police investigate

பெரம்பலூர் நகர்புறத்தில், வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி உள்ளது. அதன் அருகில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான வயலில், 60 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் உதவியுடன் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், கிணற்றில் குளிக்க வந்தவர் தவறி விழுந்து விட்டாரா அல்லது கொலை செய்து கிணற்றில் வீசி விட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:42:18
Privacy-Data & cookie usage: