பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி! போலீஸ் விசாரணை!!

schedule
2022-09-15 | 18:15h
update
2022-09-15 | 18:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An unidentified vehicle collided near Perambalur and one person died! Police investigation!!

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் மகபூப் ஜான் மகன் குலாம் ஷெரீப் (36). விவசாயி, இவர், பெரம்பலூரில் உள்ள தனது சகோதரி பஸ்ரியா பேகம் வீட்டுக்கு நேற்றிரவு வந்துள்ளார்.

இன்று காலை வாலிகண்டபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள செங்குணம் பிரிவு பாதை அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குலாம் ஷெரீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:14:41
Privacy-Data & cookie usage: