அண்ணா நினைவு நாள் : அதிமுக

திமுக சார்பில் மாலை அணிவிப்பு : சமபந்தி விருந்து

schedule
2018-02-03 | 11:14h
update
2026-07-04 | 21:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anna Memorial Day: Equestrian feast MLA’s Participated in Citizen

பெரம்பலூரில் பேரறிஞர் அண்ணாவின் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு, புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மதன கோபலா சுவாமி மற்றும் சிறுவாச்சூர், மதுரகாளியம்மன் கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

மதன கோபாலசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) மற்றும் ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினர்.

மேலும் இன்று நடைபெற்ற பொது விருந்தில் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவிலில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு கொடுக்கபட்பட்ட புடவைகளை ஏழை எளிய பெண்கள் 200 நபர;களுக்கு வழங்கி, 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அறுசுவை உணவும் அளிக்கப்பட்டது.

திமுக சார்பில்

கிருஷ்ணாபுரம்


இதே போன்று திமுக சார்பில், வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரத்தில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் குன்னம், ராஜேந்திரன், மாவட்ட துணைப் செயலாளர் டி.சி.பி பாஸ்கர், ஒன்றிய செயலாளர் நல்லத்தம்பி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:13:21
Privacy-Data & cookie usage: