பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கோவில்களில் பொது விருந்து

schedule
2017-02-03 | 17:28h
update
2026-06-27 | 16:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு மதன கோபாலசுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் இன்று, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு, வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவலில் அம்மனுக்கு காணிக்கையாக வரப்பெற்ற புடவைகளை 200 ஏழை, எளிய வயதான தாய்மார்களுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் வழங்கினர். பின்னர் நடைபெற்ற பொது விருந்து நிகழ்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர;, மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோh; 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் கலந்துகொண்டு விருந்து உண்டனர்.

முன்னதாக பெரம்பலூர் மதனகோபாலசுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற பொதுவிருந்து நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அருள்மிகு ஸ்ரீமதுராகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் பி.ஜெயதேவி அருள்மிகு மதன கோபாலசுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, ஆய்வாளர்கள் வெங்கடேஷ், ஸ்ரீதேவி மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 16:56:12
Privacy-Data & cookie usage: