அண்ணாவின் 48 வது நினைவு நாள் : அதிமுவினர் அண்ணா உருவ சிலைக்கு மாலை மரியாதை

schedule
2017-02-03 | 08:36h
update
2026-06-25 | 13:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anna’s 48th anniversary

அ.தி.மு.க. சார்பில் மறைந்த, தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாளையொட்டி பெரம்பலூரில் அதிமுகவினர், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை குன்னம், ஆலத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), முன்னாள் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் பூவராகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று தீபா பேரவையை சேர்ந்தவர்ளும், திமுக சார்பில் குரும்பலூர், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 14:00:02
Privacy-Data & cookie usage: