அண்ணா பிறந்த நாள்: பெரம்பலூரில், அதிமுக சார்பில், ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை!

schedule
2022-09-15 | 18:53h
update
2022-09-15 | 18:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Anna’s birthday: At Perambalur, on behalf of AIADMK, O.P.S. EPS team members wear garlands and respect!

பெரம்பலூரில், இன்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமசந்திரன் தலைமையில் அதிமுக கட்சியின் ஓ.பி.எஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு லட்டு வழங்கினர்.

Advertisement

இதே போன்று ஈ.பி.எஸ் அணியினர் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்.ஆ.அருணாசலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார் (பெரம்பலூர்), கர்ணன் (ஆலத்தூர் கிழக்கு), பெரம்பலூர் நகர செயலாளர் இராஜபூபதி, பேரூர் மற்றும் கிளைக்கழக ஒன்றிய மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 06:46:08
Privacy-Data & cookie usage: