Announcement to apply for first year admission students in Perambalur ITIs! Collector V. Shantha Info!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஐடிஐ – யில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் உள்ளஇ இடங்களை நிரப்ப எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிலலாம்.

2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்காக www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாணவர்களின் நலன் கருதி இணையதளம் மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்களுக்காக பயிற்சி நிலையத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுதவி மையங்கள் 17.08.2020 முதல் 15.09.2020 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி சேவை மையங்கள் ஆலத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் , பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் அமைக்கப்பட்டள்ளன. எனவே மாணாக்கர்கள் உதவி சேவை மையங்களையும் நேரில் வந்து அணுகலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50, விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மாற்றுச்சான்றிதழ், 8வது மற்றும் 10வது மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள், முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான ஆவணங்கள் மற்றும் Passport size photo &signature ஆகிய ஆவணங்கள் ஸ்கேன்செய்தது.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சிறந்த வகையில் பயிற்சி வழங்குவதுடன் அரசின் சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.500 உதவிதொகை, விலையில்லா மடிகணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், பொறியியல் உபகரணங்கள், காலணி, மற்றும் பேருந்து பயண அட்டை போன்ற அனைத்தும் வழங்கப்படும்.

ஆலத்தூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச விடுதி வசதியுடன் கூடிய மின்சார பணியாள் ((Electrician), பொருத்துநர் (Fitter), இயந்திரவேலையாள்(Machinist), பற்றவைப்பவர் (welder), மற்றும் சோலார் (Maintenance of solar equipments) ஆகிய தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சிக்கான உதவிதொகை, உண்டு உறைவிடத்திற்கான தொகை மற்றும் போக்குவரத்திற்கான தொகையுடன் கூடிய internship training -ம் கொடுக்கப்படும். பயிற்சி முடிந்த பின் பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் apprenticeship training-ம் பெற்று வழங்கப்படும்.

எனவே மாணவர்கள் அதிக வேலைவாய்ப்பை கொண்ட, தொழிற்பயிற்சியின் மகத்துவத்தை அறிந்து, மையங்களில் சேர்ந்து பயன்பெறவும், மேலும் விபரங்களுக்கு 9499055884, 9499055883, 9488451505 மற்றும் 8072345080 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!