முதலமைச்சரின் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனம் விருது பெற விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் கலெக்டர்

schedule
2021-06-19 | 17:56h
update
2021-06-19 | 17:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Apply for Chief Minister’s Best Social Worker and Best Social Service Institution Award: Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரால் 2021ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது. ஆகையால், தகுதி வாய்ந்த சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

இவ்விருதிற்கான கருத்துருக்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 25.06.2021-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 04328-209296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 08:14:35
Privacy-Data & cookie usage: