நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் விண்ணப்பிக்கலாம்

schedule
2016-12-19 | 13:56h
update
2026-06-27 | 07:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

apply for Pension to the players who are ailing

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராமசுப்ரமணிய ராஜா விடுத்துள்ள தகவல் :

2016-ஆம் ஆண்டிற்கான நலிந்த நிலையிலுள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெற 2016 ஏப்ரல் முதல் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisement

பள்ளி, கல்லூரி காலங்களில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர். அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுச் சங்கங்களினால் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருத்தல் வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. விண்ணப்பதாரின் மாத வருமானம் ரூ.6000-க்கு (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) மிகாமல் இருத்தல் வேண்டும்

அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட, விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவை கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறவோ இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. ஓய்வூதிய விண்ணப்ப படிவத்தை எச்சூழ்நிலையிலோ, அடிப்படையில் நிராகரிக்கவோ, தள்ளுபடி செய்யவோ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உரிமை உண்டு

இதற்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.10- ஆகும். விண்ணப்பத்தினை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத் தொகையினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக 31.01.2017-ந் தேதிக்கு முன்னர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். 31.01.2017-ந் தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 07:40:28
Privacy-Data & cookie usage: