Apply for unemployment subsidies for people with disabilities

information collector.

schedule
2016-07-04 | 16:30h
update
2026-06-27 | 17:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Apply for unemployment subsidies for people with disabilities – information collector.

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது.

இதற்குரிய படிவம் பெற்று 31.08.2016-க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பெரம்பலூரில் சமர்ப்பிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் மற்றும் கண் பார்வையற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

Advertisement

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.2016 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட (அ) பழங்குடி இனத்தவர்கள் 30.06.2016 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் 31.08.2016-க்குள் விண்ணப்பம் பெற்று அங்கேயே பூர்த்தி செய்து விண்ணப்பம் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 17:31:38
Privacy-Data & cookie usage: