தொடக்க கல்வி பட்டய படிப்பு பயிற்சிக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

schedule
2022-07-02 | 19:40h
update
2022-07-02 | 19:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Apply online for Diploma in Elementary Education: Perambalur District Teachers Training Institute

பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

2022-2023 ம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளுடன் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் 04.07.2022 காலை 10.00 மணி முதல் 09.07.2022 அன்று மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பொது பிரிவைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் மேல் நிலைக் கல்வித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைக் கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்று 45 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 31.07.2022 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 31.07.2022 அன்று 35 வயதிற்குமிகாமலும், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்கள் 31.07.2022 அன்று 40 வயதிற்குமிகாமலும், கலப்பினத் தம்பதியரில் பொது, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் இனம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 31.07.2022 அன்று 32 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் 31.07.2022 அன்று 37 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், பாடாலூர், பெரம்பலூர், மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனம், வேப்பூர், பெரம்பலூர். என்ற முகவரியில் நேரிலோ அல்லது ஆலத்தூர்-9994219899, 9842290560, 6381226784, 8870046983. பெரம்பலூர் -9994219899,9442668040, 9894253498. வேப்பந்தட்டை– 9994219899, 9942782753. வேப்பூர் – 9487428854, 9943508918. என்ற எண்களிலோ தொடர்புக் கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 01:01:03
Privacy-Data & cookie usage: