Ariyalur Jayaram Trust has uplifted the livelihood of thousands of unemployed youths and young women; CEO Balakrishnan Information!

JEYRAM EDUCATIONAL TRUST CEO J. Balakrishnan

அரியலூர் ஜெயராம் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் ஜெ.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஜெயராம் கல்வி அறக்கட்டளையானது, அரியலூர் மாவட்டத்தில் 2009ம் ஆண்டில் தலைமை செயல் அலுவலர் ஜெ. பாலகிருஷ்ணன் சீரிய முயற்சியால்
தொடங்கப்பட்டு, தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம், பிரதம மந்திரியின் கவுசல் கேந்திரா சிறப்பு திறன் மேம்பட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் சுய வேலைவாய்ப்பு அளிப்பதற்கான தொழில் பயிற்சி மையங்களை, தமிழ் நாடு, ஆந்திரபிரதேஷ், கேரளா, உத்தர பிரதேசம், மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நிறுவப்பட்டு குறிப்பாக தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவள்ளூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் வேலையில்லா இளைஞர்களுக்கு சிறந்த முறையில் தொழில் பயிற்சிகளை அளித்து, ஒன்றிய மற்றும் மாநில அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு தொழிற்சாலைகள் மூலம் தகுந்த வேலை வாய்ப்பினையும் கொடுத்து வருகிறது.

மேலும் தமிழகத்தின் முக்கிய தொழிற்பேட்டை நகரங்களான சென்னை, திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி போன்ற பல்வேறு இடங்களில் உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்நிறுவனங்கள் மூலமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சிறப்பாக பணியமர்த்த படுகிறார்கள். இவ்வாறாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படுவதோடு இந்த சமுதாயத்திற்கு தொழில் வல்லுனர்களை உருவாக்கித் தந்து வருகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், தேசிய திறன்மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு அரசு மகளிர் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிற் பயிற்சியுடன் கூடிய செயல் வழிக்கற்றலுக்கு ஜெயராம் அறக்கட்டளை வழிவகை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல ஆயிரக்கணக்கான வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை செய்துள்ளதை ஜெய்ராம் அறக்கட்டளையானது பெருமையுடன் ஆண்டு தோறும் உறுதி செய்து வருகிறது.

தற்போது தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகத்துடன் இணைந்து நிகழ் ஆண்டிற்கான திறன் மேம்பட்டு பயிற்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்கி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுடைவோர்கள் 9750962821, 7094442121 என்ற தொலை பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பயன் பெறலாம். http://www.jeyedu.co.in


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!