மனைவி உள்பட பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருந்த கணவர் மீது டாக்டர் புகாரால் கைது!

schedule
2023-01-22 | 02:43h
update
2023-01-22 | 02:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Arrested on the doctor’s complaint against the husband who had taken a video of him flirting with many women including his wife!

பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோடு, வரதட்சணை கேட்ட கணவனை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர். இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம் ஆண்டு செப். 10ம்தேதி திருமணம் நடந்தது. விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி அகிலாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்துவதோடு, அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளால் அடிக்கடி திட்டி தாக்கி வந்துள்ளார்.

Advertisement

மேலும், 50 பவுன் நகையும், பணம் வரதட்சணையாக கொடுத்தால் தான் வாழ முடியும் என்று கூறி கொடுமைப்படுத்திய விமலுக்கு அவரது குடும்பத்தினர் அனைவரும்
உடந்தையாக இருந்த தோடு அவர்களும் திட்டி, தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், விமலின் செல்போனை எடுத்து பார்த்த பொழுது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை வைத்து அவர்களிடம் விமல் மிரட்டி பணம் பறித்தாக கூறப்படுகிறது. அதேபோல் மனைவி அகிலாவிடமும் உடலுறவு கொண்டதையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அகிலா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் விமல் மற்றும் அவரது மாமனார் இளங்கோவன், மாமியார்
விஜயலட்சுமி, நாத்தனார் மீனா மற்றும் அவரது கணவர் சிவா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த விமலை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 05:53:59
Privacy-Data & cookie usage: