கால்நடை பராமரிப்புத் துறையின் செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி : பெரம்பலூர் ஆட்சியர்

schedule
2018-01-11 | 12:49h
update
2018-01-11 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Artificial Inspection Training of Veterinary Care Department: Perambalur Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயற்கைமுறை கருவூட்டல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

Advertisement

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் நபர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர மோட்டார் ஊர்தி ஓட்டும் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மூன்று மாத பயிற்சியும் பயிற்சி முடித்த பின் கருவூட்டல் உபகரணங்களும் அரசு மூலம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

பயிற்சி முடித்த நபர்கள் கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களிலிருந்து, 3லிருந்து 5 கி.மீ தொலைவிற்கு மேல் உள்ள கிராமங்களில் மற்றும் அரசு கருவூட்டல் நிலையங்கள் இல்லாத ஊர்களில் செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேற்படி கருவூட்டல் பணிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

விருப்பம் உள்ள நபர்கள் பெரம்பலூர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, துணை இயக்குநா; அலுவலகத்தை (பெரம்பலூர் கால்நடை மருந்தக வளாகம்) வேலை நாட்களில் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 04328- 225799 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 16:32:54
Privacy-Data & cookie usage: