Arumbavur Big lake in filled out by rain water; Near in Perambalur 

பெரம்பலூர் மாவட்டத்தில், வானிலை மையம் அறிவித்ததை போன்று நேற்று முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மலையாளப்பட்டி, சின்னமுட்டல், கொட்டாரக்குன்று போன்ற பகுதிகளில் உள்ள பச்சைமலைத் தொடரில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட கல்லாற்று வெள்ளப் பெருக்கால் இன்று அதிகாலை அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருகிறது. அதனை அப்பகுதி மக்களும், உழவர்களும் பெரும் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர். இதே போன்று அப்பகுதியில் உள்ள அடுத்தடுத்த ஏரிகள் நிரம்பும் என மக்கள் ஆர்வமுடன் எதிர்பாத்து உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திற்கு எப்போதுமே வடக்கு கிழக்கு பருவமழையே அதிக அளவு மழையை பொழியும். இதனால், இந்த மாவட்டத்தில் நன்செய் பயிர்களான நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யவர். தென்மேற்கு பருவ மழையால் அதிகளவு மானாவாரி பயிர்களை சாகுபடி செய்யமுடியும்.  வரும் டிசம்பர் மாதம் வரை கனமழை தொடர்ந்தால் தண்ணீர் இல்லாத ஏரிகளால் நீர்பிடிப்பு அதிகமானால், நிலத்டி நீர்மட்டம் உயரும் என்பதால், கோடைக்காலத்தில் தண்ணீர் பஞ்சமும், தற்போது விவசாயத்தை தொடர முடியம் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

இன்று மாவட்ட நிர்வாகம் வழங்கிய மழையளவு  விவரம் (மி.மீ):

பெரம்பலூர் 20, அகரம்சிகூர் 12, லப்பைக்குடிக்காடு 15, புதுவேட்டக்குடி, 10, எறையூர் 13, கிருஷ்ணாபுரம் 06, தழுதாழை 0, வி.களத்தூர் 07, வேப்பந்தட்டை 09, செட்டிக்குளம் 13, பாடாலூர் 21 என மொத்தம் 126 மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 11.45 மில்லி மீட்டராகும்.  

 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!