மாற்றுத்திறனாளிகளும் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிரைலி முறையிலான விளக்க கையேடுகள் வினியோகம்.

schedule
2016-03-21 | 04:14h
update
2026-06-22 | 13:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்களார் பதிவு மற்றும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக இந்திய தேர;தல் ஆணையம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மேலும் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர;களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

அதிலும் முக்கியமாக மாற்றுத்திறனுடைய வாக்காளர;கள் வாக்குச்சாவடிக்கு எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 616 பார்வை குறைபாடுடைய நபர்களில் 337 நபர்கள் 18 வயது நிரம்பியவர்களாக, வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.

இவ்வாறு பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, முகவரி மாற்றம், பெயர்திருத்தம் மேற்கொள்வது, வாக்குச்சாவடி மையங்களை தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தெரிந்து கொள்வதற்காகவும்,

அவர்களுக்கு புரியும் வகையில் பிரைலி அட்டையில் அச்சிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய பிரைலி அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளிடம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கினார்.

அதனைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அதில் கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை படித்து தெரிந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இராமகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.06.2026 - 13:36:09
Privacy-Data & cookie usage: