Associations and federations for professional organizations may apply to provide apprenticeship training; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோh; அமைச்சகம், திறன்களை பலப்படுத்துதல் மற்றும் தொழில் துறை மதிப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் இந்தியஅரசுமற்றும் உலக வங்கி பங்களிப்பு நிதியுதவியுடன் தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு மூலமாக சிறுஇ குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களில், 8 மற்றும் 10-வது படித்த, ஐடிஐ பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு, தொழில் பழகுநர் பயிற்சி வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தை சிறந்தமுறையில் அமல்படுத்தும் மிகுந்த ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் தேர்வு செய்யப்படும் தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு திட்ட அமலாக்க காலத்திற்கான பயிற்சி மற்றும் நிர்வாக செலவினமாக அதிகபட்சமாக ரூபாய் ஒரு கோடி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மத்தியஅரசின் டிஜிடி மற்றும் மாநில அரசின் டிஇடி இணையதளத்திலிருந்து இதற்கென வடிவமைக்கப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக பரிந்துரைக்க வேண்டிய இணைப்புகளுடன் விண்ணப்பிக்கும் தொழில் நிறுவனங்களுக்கான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியிலிருந்து striveclusters@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும்.

விண்ணப்பம் மற்றும் தகுதி வரம்பு குறித்த தகவல்கள் dgt.gov.in/strive எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறைகளும் மற்றும் மாதிரி விண்ணப்பங்களும் மேற்படி இணையதளத்தில் உள்ளது. முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஜுலை 30-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பிட வேண்டும். மேலதிக விபரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், பெரம்பலூரில் உள்ள உதவி இயக்குநர், மாவட்டத்திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 9488451405 என்ற எண்ணிற்கு தொலைபேசியிலோ தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!